தமிழ் சினிமாவில் த்ரில்லர் படங்களுக்கு எப்போதும் ரசிகர்கள் அதிகம். நான் விரும்பி பல முறை பார்த்த திரைப்படங்களில் இதுவும் ஒன்று. முதன் முதலில் ஆறாம் வகுப்பு படிக்கையில் சன் தொலைகாட்சியில் பார்த்ததாக நினைவு. இந்த படம் எத்தனை முறை பார்த்தாலும் எனக்கு சலிப்பை ஏற்படுத்தவில்லை.விஜயகாந்த் இந்த படத்துல ரொம்ப மிடுக்கா கம்பீரமான காவல் துறை அதிகாரியாக வருவார்.
டிஸ்கோ சாந்தியும் அவரது தோழிகளும் ஹோட்டல் சோழா பிக்னிக் வருகின்றனர். நள்ளிரவில் டிஸ்கோ சாந்தி கடற்கரை ஓரமாக ராத்திரி நேரத்து பூஜை பாடலுக்கு தன் தோழிகளுடன் கவர்ச்சி நாடனும் ஆடி நம்மை சூடேற்றுகிறார்.
பின் சாந்தி ஹோட்டல் அறைக்கு போவதரியாது இருக்கையில் வழியில் உள்ள மணியினை அடிக்கிறார். இவர் மணி அடித்த அடுத்த நொடியில் அச்சத்தத்தை கேட்டு குதிரைகள் இரண்டும் தன் கால்களை தரையில் தட்டிக்கொண்டு தயார் ஆனவுடன் அதை எடுத்துக்கொண்டு ரவிச்சந்திரன் மணி இருக்கும் இடத்தை நோக்கி செல்கிறார். இவர் வருவதை கண்டவுடன் சாந்தி மிகவும் பயந்து பின் தன்னை காத்து கொள்வதற்காக ஓடுகிறார். அப்பொழுது ரவிச்சந்திரன் அந்த கவர்ச்சி மங்கையின் கூந்தலை பிடித்து இழுத்து சென்று விடுகிறார்.
மறுநாள் தினமுரசு பத்திரிக்கையாளர் சந்திரசேகர் சோழ ஹோட்டலின் மர்மங்களை கண்டறிய செல்கிறார். அவர் செல்லும் வழியினில் கிழவியேய் பார்த்தவுடன் அவர்களை புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்.
அவ்விடத்தில் சர்ச் பாதர் பீட்டர் என்பவரை அணுகி அவரிடம் சோழா பிக்னிக் தொடர் கொலைகளை பற்றி விசாரிக்கிறார். அனால் அந்நேரம் ரவிச்சந்திரனின் சகோதரன் வந்தவுடன் இவர் அவ்விடத்தை விட்டு செல்கிறார்.
சந்திரசேகர் தான் சேகாரித்த தகவல்களையும் புகைப்படங்களையும் தினமுரசு நாளிழதலின் தலைமை ஆசிரியர் ஜெய்ஷங்கரிடம் தெரிவிக்கிறார்.சந்திரசேகரின் காதலி அமைச்சர் மலேசியா வாசுதேவனிடம் வேலை செய்கிறார். இந்தகொலைகளில் அமைச்சருக்கும் பங்கு உண்டு. அவள் மூலமாகவே சந்திரசேகர் அனைத்து ஆதரங்களையும் சேகரித்தார். ரவிச்சந்திரனின் மூலம் தங்கள் ரகசியங்கள் வெளியாவதற்கு காரணமாக இருந்த சந்திரசேகரின் காதலியை அவர் முன் கொலை செய்கின்றனர். இந்த கொலையை கண்டுபிடிப்பதற்காக விஜயகாந்த் வருகிறார்.
இந்நிலையில் சோழா ஹோட்டலின் ஆபத்துகளை பற்றி தெரியாமல் கார்த்திக்கும் சசிகலாவும் தேனிலவிற்கு அங்கு செல்கின்றனர். இவர்களைக்கண்ட அந்த கிழவி மணியை அடித்து ரவிசந்திரனுக்கு தகவல் தெரிவித்து விடுகிறார். ரவிசந்திரன் தனது குதிரை வண்டியில் அவர்கள் இருந்த ஹோட்டல் அறைக்கு சென்று கார்த்திக்கை தாக்கி விட்டு சசிகலாவை தொடுகையில் அவள் விழித்து கொண்டு மாடியில் இருந்து தப்பித்து சாலையே நோக்கி ஓடுகிறாள். சாலையில் அரைகுறை ஆடையுடன் கார்களில் செல்பவர்களிடம் உதவி கேட்கிறாள். ரவிசந்திரன் இவளை நெருங்கும் நேரத்தில் சாலையில் செல்லும் ஒருவர் சசிகலாவை தன் காரில் ஏற்றி பாதுகாத்து அவளை மருத்துவமனையில் சேர்த்து விட்டு சென்று விடுகிறார்.அமைச்சரின் அடியாட்கள் ஜெய்ஷங்கரின் பத்திரிக்கை அச்சகத்தையும் பணிபுரிபவர்களையும் தாக்குகின்றனர். பின் சசிகலாவை மருத்துவமனையில் தேடிவரும் பொழுது சந்திரசேகர் அவர்களிடம் இருந்து சசிகலாவை காப்பாற்றி விஜயகாந்திடம் கொண்டு சேர்த்து விட்டு இறந்துவிடுகிறார்.
விஜயகாந்த் வீட்டில் இல்லாத நேரத்தில் சசிகலாவை கொலைசெய்ய வருகின்றனர். அவளை விஜயகாந்தின் மனைவி சரிதா காப்பாற்றி விட்டு இறந்து விடுகிறார். விஜயகாந்த், ஜெய்ஷங்கர், அருண் பாண்டியன் மூவரும் சோழா பிக்னிக் செல்கின்றனர். கார்த்திக் அங்கிருந்து தப்பித்து இவர்களோடு இணைந்து ரவிசந்திரனை பிடிக்க முயற்சி செய்கிறார். ரவிச்சந்திரன் இவர்களை சங்கிலியால் கட்டிவிட்டு பெண்களை கொள்ளும் காரங்களை கூறுகிறார். அவர் ஒரு பெண்ணை தீவிரமாக காதலித்ததாகவும் அவள் இவரை ஏமாற்றிவிட்டு வேறு ஒருவனுடன் சென்று விட்டாலும் அவளது கண்கள் தினமும் மறக்கமுடியாமல் அன்றிலிருந்து பெண்களின் கண்களுக்காக அவர்களை பிடித்து கொலை செய்கிறேன் என்று கூறுகிறார்.
விஜயகாந்த் இவர்களை அவனிடம் காப்பாற்றி அவர்களை கைது செய்கிறார். கார்த்திக்கும் சசிகலாவும் மீண்டும் இணைந்து செல்கிறனர்.
சிறப்புகள்:
1. இதுவே திரைப்பட கல்லூரி மாணவர்கள் எடுத்த முதல் திரைப்படம்.
2. தொய்வு இல்லாத திரைக்கதை.
3. பாடல்கள் அனைத்தும் கதைக்கு ஏற்றவாறு அமைத்தது.
4. விஜயகாந்தின் அற்புதமான நடிப்பு.
5. பயத்தை வரவைக்க கூடிய அந்த கிழவியின் திகில் கலந்த பார்வை.
6. "பேசாத விழிகள் ஊமை விழிகள்" வசனம் இன்றும் நினைவில் இருகின்றது.
முற்றும்.
நட்புடன் ,
உ.சரவணன்
கதை

No comments:
Post a Comment