Monday, May 12, 2014

The Shawshank Redemption - 1994

"நம்பிக்கையோடு செயல்படுங்கள். நல்லதே நடக்கும். "

 நான் என்ன தப்பு பண்ணேன்? எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கணும்? வாழவே பிடிக்கல  என்ன  வாழ்க்கைடா இது? இப்படி என்னை போலவே புலம்பும் அணைத்து உள்ளங்களும் இத்திரைப்படத்தை ஒரு முறையேனும் பார்க்கவும். தன்னம்பிக்கையை மிக சிறப்பாக எடுத்துக்கூறும் திரைக்காவியம். 


கதை

நள்ளிரவில் யாரும்  இல்லாத அறையில்  திடிரென ஒரு ஆணும் பெண்ணும் உள்ளே வந்தனர். வந்த வேகத்தில் அவன் அவளின் உடைகளை அகற்றி அருகில் இருந்த படுக்கையறையில் விழுந்தான். அந்நேரம் வீட்டிற்கு அருகில் வெளியே காரில் மது அருந்தியபடியே அண்டி டுப்ரீன்  கையில் துப்பாக்கியோடு தன் மனைவி தனக்கு செய்த துரோகத்தை நினைத்து அவளை கொலை செய்ய நினைத்தான். அண்டி அவர்கள் இருக்கும் அறையை நெருங்கினான். அவர்கள் காமத்தில் எழுப்பிய சப்தத்தை கேட்க இயலாமல் தன் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டான். இது போன்று இன்பமாக யாருடனும் இருந்தது இல்லை என்று அவனிடம் அவள் கூறியதை கேட்டு மன வேதனையோடு அழத்தொடங்கினான். 

1947 ஆம் ஆண்டு அண்டி டுப்ரீன் தன் மனைவியையும் அவளுடைய காதலனையும் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ததற்கு மேய்ன் நகர நீதிமன்றம் அவருக்கு இரண்டு ஆயுள் தண்டனை விதிக்கிறது.அண்டி டுப்ரீன் கொலை செய்ய நினைத்தான். ஆனால் அவன் கொலை செய்யவில்லை. யார் செய்திருப்பார்கள் என்றும் தெரியவில்லை. இருப்பினும் அவனுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இருப்பதால் எதுவும் செய்யமுடியாமல் தண்டனையே பெற்றுக்கொள்கிறான். 


 ஷாவ்ஷாங்க் சிறைசாலையில் அதிகாரிகள் முன்னிலையில் ரெட் வருகிறான். அதிகாரிகளில் ஒருவர் ரெட்டிடம் இருபது ஆண்டுகள் தண்டனை அனுபவித்து இருக்கிறாய். நீ மனம் திருந்தி உள்ளதா? என்று கேட்கின்றார். ரெட் தான் தான் செய்த தவறுக்கு வருந்துவதாகவும் தான் விடுதலை பெற்று வெளியே சென்றாலும் தன்னால் சமூகத்திற்கு எந்த பாதிப்பும் நேராது என்று கூறினான். அதிகாரிகள் ரெட்டை அளனமாக பார்த்துவிட்டு அவனை விடுதலை செய்யாமல் மறுத்து விடுகின்றனர்.

அண்டி டுப்ரீன் பல கைதிகளுடன் ஷாவ்ஷாங்க் கொண்டு செல்லபடுகின்றான். கேப்டன் ஹட்லி கைதிகளை சிறைசாலைக்குள் அழைத்து செல்கிறார். வார்டன் நோர்டன் கைதிகளை நோக்கி நீங்கள் பாவம் செய்து இருக்கிறீர்கள். இங்கு இருக்கும் விதிமுறைகளை கட்டாயம் பின் பட்ற்றவேண்டும் என்றும் மீறினால் கடுமையான தண்டனை கிடைக்கும் என்று கூறுகிறார். கேப்டன் ஹீட்லி கைதிகளிடம் மிகவும் கோவமாக தனுக்கு தெரியாமல் இங்கே சிறுநீர் கூட கழிக்ககூடாது என்று கூறுகின்றான்.

அண்டி டுப்ரீன் ரெட்டுடன் நட்பாகிறான். ரெட் இருபது வருடங்கள் சிறையினில்  இருந்ததால்  கைதிகளுக்கு தேவையான பொருட்களை வெளியில் இருந்து உள்ளே கொண்டு வந்து விடுவான். அவன் மூலம் அண்டி டுப்ரீன் ஒரு சிறிய சுத்தியலைன் வாங்கி சிற்பம் செய்வதற்கு பயன்படுத்துக்கிறான். பின் அந்நாட்களின் கவர்ச்சி நடிகை புகைப்படத்தையும் ரெட் மூலம் வாங்கி தான் அரையினில் மாற்றி கொள்கிறான். அண்டி  டுப்ரீன் பைபிள் வாசிப்பதைக் கண்டு வார்டன் நோர்டன் அவன் மேல் நல்ல மதிப்பு உண்டாகிறது.

அண்டி டுப்ரீன் சிறைசாலையில் உள்ள தொழிற்சாலைக்கு வேலை செய்கையில் கேப்டன் ஹீட்லி சக அதிகாரிகளுடன் வருமான வரி பற்றி பேசுவதை கண்டு வங்கியில் பணிபுரிந்த அனுபவத்தின் மூலம் அதற்கு சரியான தீர்வை கூறி கேப்டன் ஹீட்லேயிடம் நற்பெயர் பெறுகின்றான். அண்டி டுப்ரீனை  சிறையில் பாப் என்னும் கைதி அடிக்கடி ஓரினசேர்க்கையில் ஈடுபட கட்டாயப்படுத்துகிறான். அண்டி டுப்ரீன் சம்மதிக்க வில்லை என்றால் அவனை பலவந்தமாக தாக்குவதை வழக்கமாக வைத்துக்கொண்டு இருந்தனர். கேப்டன் ஹீட்லி பாப்பை தாக்கி அவனை கால்களை உடைத்து அண்டி டுப்ரீனுக்கு உதவுகிறார். இதன் மூலம் சக கைதிகளிடமும் அண்டி டுப்ரீனுக்கு செல்வாக்கு உயர்கிறது.

வார்டன் சிறைக்கைதிகளை அரசாங்க  வேலைகளுக்கு பயன்படுத்தி அதன் மூலம் வரும் வருமானத்திற்கு  இவரே கணக்கு பார்கிறார். இல்லாத ஒரு நபரின் பெயரில் (ராண்டேல் ஸ்டீபன்) இந்த கருப்பு பணம் சேமித்து வைக்கிறார். அண்டி டுப்ரீன் உதவியுடன் இந்த காரியங்களை வார்டன் செய்துகொண்டார்.

வருடங்கள் சென்றன. ரெட்டும் அண்டியும் மிகவும் நெருங்கிய நண்பர்களாய் இருந்தனர். அப்பொழுது டாம்மி என்னும் துரு துரு கைதி சிறைசாலை வந்தான். அவன் அண்டி டுப்ரீனுடன் பழகிய பின்பு அவர் சிறை வந்த காரணத்தை ரெட்டிடம் கேட்கிறான். காரணத்தை கேட்டவுடன் அண்டி டுப்ரீன் அந்த கொலைகளை செய்யவில்லை என்றும் தான்  முன்பு வேறு ஒரு சிறையில் இருக்கையில் தன்னுடன் இருந்த சக கைதி ஒருவன் பணத்திற்காக இந்த கொலைகளை செய்ததாக தன்னிடம் கூறியதாக ரெட்டிடம் கூறுகிறான். 

அண்டி டுப்ரீனுக்கு இந்தனை ஆண்டு காலம் கழித்து இந்த உண்மை தெரிந்ததை எண்ணி மனம் நொந்து போகிறான். வார்டன் நோர்டோனிடம் சென்று தான் வழக்கை மறுபடி விசாரிக்க உதவவேண்டும் என்று கெஞ்சுகிறான். ஆனால் வார்டன் நோர்டோனோ இவன் கூறுவதை புறக்கணித்து விடுகிறார். அண்டி டுப்ரீன் வெளியே சென்றால் தான் செய்யும் குற்றங்கள் வெளிய தெரிந்துவிடும் என்று எண்ணி அவனுக்கு உதவ 
மறுக்கிறார்.

அண்டி டுப்ரீன் தான் சிறையில் இருந்து தப்பித்தால் மெக்ஸிகோவிற்கு அருகில் இருக்கும் ஒரு அழகிய தீவில் தன் மீதி வாழ்க்கையை வாழ போவதாக கூறுகிறான். ரெட் உன் கனவு நடக்க சாத்தியம் இல்லை என்கின்றான். அதற்கு அண்டி போராடி வாழனும் இல்லை சாகனும் என்று கூறுகிறான். ரெட் விடுதலை ஆனவுடன் தன்னை தேடி  பக்ஸ்டன் என்னும் இடத்திற்கு வரவேண்டும் என்று கூறி சத்தியம் வாங்கி கொள்கிறான்.


அன்றிரவு அண்டி டுப்ரீன் அவனது அறையில் இல்லை என்று தெரிந்து வார்டன் நோர்டன் மிகவும் கோவத்துடன் ஒரு கல்லை அவன் அறையில் உள்ள புகைப்படத்தின் மீது வீசுகிறார். அது சுவற்றிற்கு உள்ளே சென்று விழுந்தது. ஆம் அண்டி டுப்ரீன் இருபது ஆண்டுகளாக தன்னிடம் இருந்த சிறிய சுத்தியல் மூலம் சுவற்றி உடைத்து சுரங்கபாதை வழியாக தப்பித்தது தெரிய வருகிறது. 

அண்டி டுப்ரீன் சிறைசாலையில் வார்டன் நோர்டோனும் கேப்டன் ஹீட்லியும் செய்த கொலைகளைப் பற்றி செய்திதாள்களுக்கு தகவல் தெரிவித்து விடுகிறான். வங்கிகளுக்கு சென்று தன்னை ராண்டேல் ஸ்டீபன் என்று கூறி கருப்பு பணத்தை மாற்றிக்கொண்டு சென்று விடுகிறான்.காவல்துறை அதிகாரிகள் கேப்டன் ஹீட்லேயே கைது செய்த பின்னர் வார்டன் நோர்டன் அவர்களிடம் பிடிபடாமல் தன் கைதுப்பாகியினால் தன்னைத்தானே  சுட்டுக்கொண்டு இறந்து விடுகிறார்.

நாற்பது ஆண்டுகள் சிறைத்தண்டனை முடித்தவுடன் பரோலில் ரெட் வெளியே வருகிறான். சமூகத்தில் அவனால் ஒன்றி வாழ இயலவில்லை. இருப்பினும் அண்டி டுப்ரீனுக்கு கொடுத்த வாக்கிற்காக அவனை தேடி செல்கிறான். இரு நண்பர்களும் சுதந்திரமாக சந்தித்து நட்பு பாராட்டுகின்றனர்.


மனம் கவர்ந்தவைகள்:

1. ப்ரூக்ஸ் ஹத்ளேன் (நூலக பராமரிப்பாளர்) முதியவரான இவர் தன் வாழ்நாள் முழுவதும் சிறையில் கழித்துவிட்டு பின் விடுதலையாகி வந்து வெளியே சமூகத்துடன் ஒன்ற முடியாமல் வேதனை படுவதும், பின் தற்கொலை செய்து கொள்ளும் காட்சி மிகவும் ரணமானது. 


2.ரெட் அறிமுக காட்சியில் பரோலுக்காக அவர் பேசியுவுடன் அதிகாரிகள் நிராகரிப்பதும் பின் நாற்பது ஆண்டுகள் கழித்து பரோலில் விடுவார்கள் என்ற நம்பிக்கை இல்லாமல் அவர் பேச அதிகாரிகள் அவரை விடுதலை செய்வதும் அருமையான காட்சிகள்.

3. அண்டி டுப்ரீன் அந்த கொடுரமான சிறைசாலையில் அங்கு இருக்கும் மனிதர்களுக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொண்டு நற்பெயர் பெரும் காட்சி.


4. அண்டி டுப்ரீன் சிறைசாலையில் இருந்து தப்பிக்கும் காட்சி மிகவும் ரசிக்ககூடியவை. 

நம்பிக்கையின் வெற்றியை அண்டி டுப்ரீன் தப்பிக்கையில் உணரலாம்.


நட்புடன்,
உ.சரவணன்


1 comment: