Monday, May 12, 2014

The Shawshank Redemption - 1994

"நம்பிக்கையோடு செயல்படுங்கள். நல்லதே நடக்கும். "

 நான் என்ன தப்பு பண்ணேன்? எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கணும்? வாழவே பிடிக்கல  என்ன  வாழ்க்கைடா இது? இப்படி என்னை போலவே புலம்பும் அணைத்து உள்ளங்களும் இத்திரைப்படத்தை ஒரு முறையேனும் பார்க்கவும். தன்னம்பிக்கையை மிக சிறப்பாக எடுத்துக்கூறும் திரைக்காவியம். 


கதை

நள்ளிரவில் யாரும்  இல்லாத அறையில்  திடிரென ஒரு ஆணும் பெண்ணும் உள்ளே வந்தனர். வந்த வேகத்தில் அவன் அவளின் உடைகளை அகற்றி அருகில் இருந்த படுக்கையறையில் விழுந்தான். அந்நேரம் வீட்டிற்கு அருகில் வெளியே காரில் மது அருந்தியபடியே அண்டி டுப்ரீன்  கையில் துப்பாக்கியோடு தன் மனைவி தனக்கு செய்த துரோகத்தை நினைத்து அவளை கொலை செய்ய நினைத்தான். அண்டி அவர்கள் இருக்கும் அறையை நெருங்கினான். அவர்கள் காமத்தில் எழுப்பிய சப்தத்தை கேட்க இயலாமல் தன் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டான். இது போன்று இன்பமாக யாருடனும் இருந்தது இல்லை என்று அவனிடம் அவள் கூறியதை கேட்டு மன வேதனையோடு அழத்தொடங்கினான். 

1947 ஆம் ஆண்டு அண்டி டுப்ரீன் தன் மனைவியையும் அவளுடைய காதலனையும் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ததற்கு மேய்ன் நகர நீதிமன்றம் அவருக்கு இரண்டு ஆயுள் தண்டனை விதிக்கிறது.அண்டி டுப்ரீன் கொலை செய்ய நினைத்தான். ஆனால் அவன் கொலை செய்யவில்லை. யார் செய்திருப்பார்கள் என்றும் தெரியவில்லை. இருப்பினும் அவனுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இருப்பதால் எதுவும் செய்யமுடியாமல் தண்டனையே பெற்றுக்கொள்கிறான். 


 ஷாவ்ஷாங்க் சிறைசாலையில் அதிகாரிகள் முன்னிலையில் ரெட் வருகிறான். அதிகாரிகளில் ஒருவர் ரெட்டிடம் இருபது ஆண்டுகள் தண்டனை அனுபவித்து இருக்கிறாய். நீ மனம் திருந்தி உள்ளதா? என்று கேட்கின்றார். ரெட் தான் தான் செய்த தவறுக்கு வருந்துவதாகவும் தான் விடுதலை பெற்று வெளியே சென்றாலும் தன்னால் சமூகத்திற்கு எந்த பாதிப்பும் நேராது என்று கூறினான். அதிகாரிகள் ரெட்டை அளனமாக பார்த்துவிட்டு அவனை விடுதலை செய்யாமல் மறுத்து விடுகின்றனர்.

அண்டி டுப்ரீன் பல கைதிகளுடன் ஷாவ்ஷாங்க் கொண்டு செல்லபடுகின்றான். கேப்டன் ஹட்லி கைதிகளை சிறைசாலைக்குள் அழைத்து செல்கிறார். வார்டன் நோர்டன் கைதிகளை நோக்கி நீங்கள் பாவம் செய்து இருக்கிறீர்கள். இங்கு இருக்கும் விதிமுறைகளை கட்டாயம் பின் பட்ற்றவேண்டும் என்றும் மீறினால் கடுமையான தண்டனை கிடைக்கும் என்று கூறுகிறார். கேப்டன் ஹீட்லி கைதிகளிடம் மிகவும் கோவமாக தனுக்கு தெரியாமல் இங்கே சிறுநீர் கூட கழிக்ககூடாது என்று கூறுகின்றான்.

அண்டி டுப்ரீன் ரெட்டுடன் நட்பாகிறான். ரெட் இருபது வருடங்கள் சிறையினில்  இருந்ததால்  கைதிகளுக்கு தேவையான பொருட்களை வெளியில் இருந்து உள்ளே கொண்டு வந்து விடுவான். அவன் மூலம் அண்டி டுப்ரீன் ஒரு சிறிய சுத்தியலைன் வாங்கி சிற்பம் செய்வதற்கு பயன்படுத்துக்கிறான். பின் அந்நாட்களின் கவர்ச்சி நடிகை புகைப்படத்தையும் ரெட் மூலம் வாங்கி தான் அரையினில் மாற்றி கொள்கிறான். அண்டி  டுப்ரீன் பைபிள் வாசிப்பதைக் கண்டு வார்டன் நோர்டன் அவன் மேல் நல்ல மதிப்பு உண்டாகிறது.

அண்டி டுப்ரீன் சிறைசாலையில் உள்ள தொழிற்சாலைக்கு வேலை செய்கையில் கேப்டன் ஹீட்லி சக அதிகாரிகளுடன் வருமான வரி பற்றி பேசுவதை கண்டு வங்கியில் பணிபுரிந்த அனுபவத்தின் மூலம் அதற்கு சரியான தீர்வை கூறி கேப்டன் ஹீட்லேயிடம் நற்பெயர் பெறுகின்றான். அண்டி டுப்ரீனை  சிறையில் பாப் என்னும் கைதி அடிக்கடி ஓரினசேர்க்கையில் ஈடுபட கட்டாயப்படுத்துகிறான். அண்டி டுப்ரீன் சம்மதிக்க வில்லை என்றால் அவனை பலவந்தமாக தாக்குவதை வழக்கமாக வைத்துக்கொண்டு இருந்தனர். கேப்டன் ஹீட்லி பாப்பை தாக்கி அவனை கால்களை உடைத்து அண்டி டுப்ரீனுக்கு உதவுகிறார். இதன் மூலம் சக கைதிகளிடமும் அண்டி டுப்ரீனுக்கு செல்வாக்கு உயர்கிறது.

வார்டன் சிறைக்கைதிகளை அரசாங்க  வேலைகளுக்கு பயன்படுத்தி அதன் மூலம் வரும் வருமானத்திற்கு  இவரே கணக்கு பார்கிறார். இல்லாத ஒரு நபரின் பெயரில் (ராண்டேல் ஸ்டீபன்) இந்த கருப்பு பணம் சேமித்து வைக்கிறார். அண்டி டுப்ரீன் உதவியுடன் இந்த காரியங்களை வார்டன் செய்துகொண்டார்.

வருடங்கள் சென்றன. ரெட்டும் அண்டியும் மிகவும் நெருங்கிய நண்பர்களாய் இருந்தனர். அப்பொழுது டாம்மி என்னும் துரு துரு கைதி சிறைசாலை வந்தான். அவன் அண்டி டுப்ரீனுடன் பழகிய பின்பு அவர் சிறை வந்த காரணத்தை ரெட்டிடம் கேட்கிறான். காரணத்தை கேட்டவுடன் அண்டி டுப்ரீன் அந்த கொலைகளை செய்யவில்லை என்றும் தான்  முன்பு வேறு ஒரு சிறையில் இருக்கையில் தன்னுடன் இருந்த சக கைதி ஒருவன் பணத்திற்காக இந்த கொலைகளை செய்ததாக தன்னிடம் கூறியதாக ரெட்டிடம் கூறுகிறான். 

அண்டி டுப்ரீனுக்கு இந்தனை ஆண்டு காலம் கழித்து இந்த உண்மை தெரிந்ததை எண்ணி மனம் நொந்து போகிறான். வார்டன் நோர்டோனிடம் சென்று தான் வழக்கை மறுபடி விசாரிக்க உதவவேண்டும் என்று கெஞ்சுகிறான். ஆனால் வார்டன் நோர்டோனோ இவன் கூறுவதை புறக்கணித்து விடுகிறார். அண்டி டுப்ரீன் வெளியே சென்றால் தான் செய்யும் குற்றங்கள் வெளிய தெரிந்துவிடும் என்று எண்ணி அவனுக்கு உதவ 
மறுக்கிறார்.

அண்டி டுப்ரீன் தான் சிறையில் இருந்து தப்பித்தால் மெக்ஸிகோவிற்கு அருகில் இருக்கும் ஒரு அழகிய தீவில் தன் மீதி வாழ்க்கையை வாழ போவதாக கூறுகிறான். ரெட் உன் கனவு நடக்க சாத்தியம் இல்லை என்கின்றான். அதற்கு அண்டி போராடி வாழனும் இல்லை சாகனும் என்று கூறுகிறான். ரெட் விடுதலை ஆனவுடன் தன்னை தேடி  பக்ஸ்டன் என்னும் இடத்திற்கு வரவேண்டும் என்று கூறி சத்தியம் வாங்கி கொள்கிறான்.


அன்றிரவு அண்டி டுப்ரீன் அவனது அறையில் இல்லை என்று தெரிந்து வார்டன் நோர்டன் மிகவும் கோவத்துடன் ஒரு கல்லை அவன் அறையில் உள்ள புகைப்படத்தின் மீது வீசுகிறார். அது சுவற்றிற்கு உள்ளே சென்று விழுந்தது. ஆம் அண்டி டுப்ரீன் இருபது ஆண்டுகளாக தன்னிடம் இருந்த சிறிய சுத்தியல் மூலம் சுவற்றி உடைத்து சுரங்கபாதை வழியாக தப்பித்தது தெரிய வருகிறது. 

அண்டி டுப்ரீன் சிறைசாலையில் வார்டன் நோர்டோனும் கேப்டன் ஹீட்லியும் செய்த கொலைகளைப் பற்றி செய்திதாள்களுக்கு தகவல் தெரிவித்து விடுகிறான். வங்கிகளுக்கு சென்று தன்னை ராண்டேல் ஸ்டீபன் என்று கூறி கருப்பு பணத்தை மாற்றிக்கொண்டு சென்று விடுகிறான்.காவல்துறை அதிகாரிகள் கேப்டன் ஹீட்லேயே கைது செய்த பின்னர் வார்டன் நோர்டன் அவர்களிடம் பிடிபடாமல் தன் கைதுப்பாகியினால் தன்னைத்தானே  சுட்டுக்கொண்டு இறந்து விடுகிறார்.

நாற்பது ஆண்டுகள் சிறைத்தண்டனை முடித்தவுடன் பரோலில் ரெட் வெளியே வருகிறான். சமூகத்தில் அவனால் ஒன்றி வாழ இயலவில்லை. இருப்பினும் அண்டி டுப்ரீனுக்கு கொடுத்த வாக்கிற்காக அவனை தேடி செல்கிறான். இரு நண்பர்களும் சுதந்திரமாக சந்தித்து நட்பு பாராட்டுகின்றனர்.


மனம் கவர்ந்தவைகள்:

1. ப்ரூக்ஸ் ஹத்ளேன் (நூலக பராமரிப்பாளர்) முதியவரான இவர் தன் வாழ்நாள் முழுவதும் சிறையில் கழித்துவிட்டு பின் விடுதலையாகி வந்து வெளியே சமூகத்துடன் ஒன்ற முடியாமல் வேதனை படுவதும், பின் தற்கொலை செய்து கொள்ளும் காட்சி மிகவும் ரணமானது. 


2.ரெட் அறிமுக காட்சியில் பரோலுக்காக அவர் பேசியுவுடன் அதிகாரிகள் நிராகரிப்பதும் பின் நாற்பது ஆண்டுகள் கழித்து பரோலில் விடுவார்கள் என்ற நம்பிக்கை இல்லாமல் அவர் பேச அதிகாரிகள் அவரை விடுதலை செய்வதும் அருமையான காட்சிகள்.

3. அண்டி டுப்ரீன் அந்த கொடுரமான சிறைசாலையில் அங்கு இருக்கும் மனிதர்களுக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொண்டு நற்பெயர் பெரும் காட்சி.


4. அண்டி டுப்ரீன் சிறைசாலையில் இருந்து தப்பிக்கும் காட்சி மிகவும் ரசிக்ககூடியவை. 

நம்பிக்கையின் வெற்றியை அண்டி டுப்ரீன் தப்பிக்கையில் உணரலாம்.


நட்புடன்,
உ.சரவணன்


Wednesday, April 23, 2014

ஊமை விழிகள் - 1986

தமிழ் சினிமாவில் த்ரில்லர்  படங்களுக்கு எப்போதும் ரசிகர்கள் அதிகம். நான் விரும்பி பல முறை பார்த்த திரைப்படங்களில் இதுவும் ஒன்று. முதன் முதலில் ஆறாம் வகுப்பு படிக்கையில் சன் தொலைகாட்சியில் பார்த்ததாக நினைவு. இந்த படம் எத்தனை முறை பார்த்தாலும் எனக்கு சலிப்பை ஏற்படுத்தவில்லை.விஜயகாந்த் இந்த படத்துல ரொம்ப மிடுக்கா கம்பீரமான காவல் துறை அதிகாரியாக வருவார். 

கதை


டிஸ்கோ சாந்தியும் அவரது தோழிகளும் ஹோட்டல் சோழா பிக்னிக் வருகின்றனர். நள்ளிரவில் டிஸ்கோ சாந்தி கடற்கரை ஓரமாக ராத்திரி நேரத்து  பூஜை பாடலுக்கு தன் தோழிகளுடன் கவர்ச்சி நாடனும் ஆடி நம்மை சூடேற்றுகிறார். 

பின் சாந்தி ஹோட்டல் அறைக்கு போவதரியாது இருக்கையில் வழியில் உள்ள மணியினை அடிக்கிறார். இவர் மணி அடித்த அடுத்த நொடியில் அச்சத்தத்தை கேட்டு குதிரைகள் இரண்டும் தன் கால்களை தரையில் தட்டிக்கொண்டு தயார் ஆனவுடன் அதை எடுத்துக்கொண்டு ரவிச்சந்திரன் மணி இருக்கும் இடத்தை நோக்கி செல்கிறார். இவர் வருவதை கண்டவுடன் சாந்தி மிகவும் பயந்து பின் தன்னை காத்து கொள்வதற்காக ஓடுகிறார். அப்பொழுது ரவிச்சந்திரன் அந்த கவர்ச்சி மங்கையின் கூந்தலை பிடித்து இழுத்து சென்று விடுகிறார். 

மறுநாள் தினமுரசு  பத்திரிக்கையாளர் சந்திரசேகர் சோழ ஹோட்டலின்  மர்மங்களை கண்டறிய செல்கிறார். அவர் செல்லும் வழியினில் கிழவியேய்  பார்த்தவுடன் அவர்களை  புகைப்படம் எடுத்துக்கொள்கிறார். 
அவ்விடத்தில் சர்ச் பாதர்  பீட்டர் என்பவரை அணுகி அவரிடம் சோழா பிக்னிக் தொடர் கொலைகளை பற்றி விசாரிக்கிறார். அனால் அந்நேரம் ரவிச்சந்திரனின் சகோதரன் வந்தவுடன் இவர் அவ்விடத்தை விட்டு செல்கிறார்.

சந்திரசேகர் தான் சேகாரித்த தகவல்களையும் புகைப்படங்களையும் தினமுரசு நாளிழதலின் தலைமை ஆசிரியர் ஜெய்ஷங்கரிடம் தெரிவிக்கிறார்.சந்திரசேகரின் காதலி அமைச்சர் மலேசியா வாசுதேவனிடம் வேலை செய்கிறார். இந்தகொலைகளில் அமைச்சருக்கும் பங்கு  உண்டு. அவள் மூலமாகவே சந்திரசேகர் அனைத்து ஆதரங்களையும் சேகரித்தார். ரவிச்சந்திரனின் மூலம் தங்கள் ரகசியங்கள் வெளியாவதற்கு காரணமாக இருந்த  சந்திரசேகரின் காதலியை அவர் முன்  கொலை செய்கின்றனர். இந்த கொலையை கண்டுபிடிப்பதற்காக  விஜயகாந்த் வருகிறார்.

இந்நிலையில் சோழா  ஹோட்டலின் ஆபத்துகளை பற்றி தெரியாமல் கார்த்திக்கும் சசிகலாவும் தேனிலவிற்கு அங்கு செல்கின்றனர். இவர்களைக்கண்ட அந்த கிழவி மணியை அடித்து ரவிசந்திரனுக்கு தகவல் தெரிவித்து விடுகிறார். ரவிசந்திரன் தனது குதிரை வண்டியில் அவர்கள் இருந்த ஹோட்டல் அறைக்கு சென்று கார்த்திக்கை தாக்கி விட்டு சசிகலாவை தொடுகையில் அவள் விழித்து கொண்டு மாடியில் இருந்து தப்பித்து சாலையே நோக்கி ஓடுகிறாள். சாலையில் அரைகுறை ஆடையுடன் கார்களில் செல்பவர்களிடம் உதவி கேட்கிறாள். ரவிசந்திரன் இவளை நெருங்கும் நேரத்தில் சாலையில் செல்லும் ஒருவர் சசிகலாவை தன்  காரில் ஏற்றி பாதுகாத்து அவளை மருத்துவமனையில் சேர்த்து விட்டு சென்று விடுகிறார்.அமைச்சரின் அடியாட்கள் ஜெய்ஷங்கரின் பத்திரிக்கை அச்சகத்தையும் பணிபுரிபவர்களையும் தாக்குகின்றனர். பின்  சசிகலாவை மருத்துவமனையில் தேடிவரும் பொழுது சந்திரசேகர் அவர்களிடம் இருந்து சசிகலாவை காப்பாற்றி விஜயகாந்திடம் கொண்டு சேர்த்து விட்டு இறந்துவிடுகிறார்.

விஜயகாந்த் வீட்டில் இல்லாத நேரத்தில் சசிகலாவை கொலைசெய்ய வருகின்றனர். அவளை விஜயகாந்தின் மனைவி சரிதா காப்பாற்றி விட்டு இறந்து விடுகிறார். விஜயகாந்த், ஜெய்ஷங்கர், அருண் பாண்டியன் மூவரும் சோழா பிக்னிக் செல்கின்றனர். கார்த்திக் அங்கிருந்து தப்பித்து இவர்களோடு இணைந்து ரவிசந்திரனை பிடிக்க முயற்சி செய்கிறார். ரவிச்சந்திரன் இவர்களை சங்கிலியால் கட்டிவிட்டு பெண்களை கொள்ளும் காரங்களை கூறுகிறார். அவர் ஒரு பெண்ணை தீவிரமாக காதலித்ததாகவும் அவள் இவரை ஏமாற்றிவிட்டு வேறு ஒருவனுடன் சென்று விட்டாலும் அவளது கண்கள் தினமும் மறக்கமுடியாமல் அன்றிலிருந்து பெண்களின் கண்களுக்காக அவர்களை  பிடித்து கொலை செய்கிறேன் என்று கூறுகிறார். 

விஜயகாந்த் இவர்களை அவனிடம் காப்பாற்றி அவர்களை கைது செய்கிறார். கார்த்திக்கும் சசிகலாவும் மீண்டும் இணைந்து செல்கிறனர்.

சிறப்புகள்:

1. இதுவே திரைப்பட கல்லூரி மாணவர்கள் எடுத்த முதல் திரைப்படம்.
2. தொய்வு இல்லாத திரைக்கதை.
3. பாடல்கள் அனைத்தும் கதைக்கு ஏற்றவாறு அமைத்தது.
4. விஜயகாந்தின் அற்புதமான நடிப்பு. 
5. பயத்தை வரவைக்க கூடிய அந்த கிழவியின் திகில் கலந்த பார்வை.
6. "பேசாத விழிகள் ஊமை விழிகள்" வசனம் இன்றும் நினைவில் இருகின்றது.

முற்றும்.

நட்புடன் ,
உ.சரவணன்





Saturday, April 19, 2014

நான் சிகப்பு மனிதன்

விஷால் & லக்ஷ்மி மேனன் ஏற்கனவே பாண்டிய நாடு திரைபடத்தின்  மூலம்  ராசியான ஜோடி  ஆகிவிட்டனர். படம் வெளிவருவதற்கு முன்பே இருவருக்கும் காதல், முத்தக்காட்சி, தணிக்கை குழு சான்றிதழ் பிரச்சனை என்று அனைத்துமே இப்படத்திற்கு நல்ல விளம்பரத்தை கொடுத்தது. எனக்கு இந்த படத்தோட trailer  பார்த்த  உடனே  படம் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. short term memory loss, split personality, multiple personality disorder போன்று இத்திரைப்படத்தில்  Narcolepsy யே தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்து உள்ளனர். Trailer ஏற்படுத்திய சுவாரஸ்யத்தை திரைப்படம் உண்டாக்கியதா  என்று பார்ப்போம்.
நர்கோலேப்சி வியாதி என்பது நீங்கள் திடிரென்று உணர்சிவசப்பட்டலோ, அதிக சந்தோஷமோ சோகமோ உங்கள தூங்கவைத்துவிடும். கதையின் நாயகனுக்கு இப்படி ஒரு விசித்தரமான வியாதி.

கதை

நான்கு ரௌடிகள் சேர்ந்து ஒரு ரயில்வே அதிகாரியே கொலை செய்கின்றனர். பின் விஷால் தன் நண்பர்களுடன் ஒரு தாதாவிடம் கள்ளத்துப்பாக்கி வாங்குகிறார். விஷால் வீட்டுக்கு வந்த பின்னர் முன்பு நிகழ்தவைகளை நினைக்கிறார். விஷாலுக்கு சிறு வயதில் இருந்தே நர்கோலேப்சி என்னும் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். முன்பு கூறியதைப்போலவே அதிகமாக உணர்ச்சிவசப்பட்டால் உறங்கி விடுவார்.  

உறக்கத்தில் இருப்பினும் அவரால் நடப்பவைகளை  கேட்க முடியும் அதனால் பள்ளியில் படிப்பில் சிறந்து விளங்குகிறார். இந்நோயினால்  அவருக்கு வேலை தர யாரும் விரும்பவில்லை. பின் தன் குறையின் மூலமே அவர் சம்பாதிக்கிறார். தன் ஆசைகளில் ஒன்றான சாலையில் தனியாக செல்லும் பொழுது தூங்கிவிடுகிறார். சாலை ஓரத்தில் இவர் இறந்து விட்டார் என்று கூறி லக்ஷ்மி மேனன்னிடம் பணம் கறந்து விடுகிறார் மயில்சாமி. அதன் பின் ஒரு நாள் தற்செயலாக இருவரும் சந்திக்கையில் இறந்தவரைக் கண்ட அதிர்ச்சியில் லக்ஷ்மி அலறியபடியே மயுங்குகிறார். லக்ஷ்மியின் அலறலைக்கேட்டு விஷால் உறங்கி விடுகிறார்.
இருவரும் காதலிக்கிறார்கள். லக்ஷ்மியின் தந்தை இதற்கு சம்மதிக்க மறுக்கிறார். காரணம் விஷால் உணர்ச்சிவசப்பட்டால் உறங்கிவிடுவார். அவரால் செக்ஸ்ல் ஈடுபட முடியாது. 


லக்ஷ்மி மேனன் ரொம்ப ஆதங்கமா ஏக்கமா சோகமா  விஷாலை பார்த்து கேட்குறாங்க நீ எப்போதாவது தூங்காம இருந்து இருக்கியா? இவரு குளிக்கும் போது தூங்கியது இல்லை என்று சொன்ன  உடனே லக்ஷ்மி விஷாலை நீச்சல் குளத்தில் தள்ளி  காமத்தில் ஒன்றாகி விஷாலையும் நம்மையும் குஷிபபடுத்துது. எல்லாம் சுபமாக இருக்க திடிரென நான்கு பேர் லக்ஷ்மி மேனனை மிகவும் வன்மையான முறையில் விஷால் உறங்கிய நிலையில் இருக்கும்பொழுது கெடுத்து விடுகின்றனர். லக்ஷ்மி மேனன் சுயநினைவை இழந்துவிடுகிறார்.  இதன் பின் விஷால் எப்படி லக்ஷ்மி மேனனை கெடுத்தவர்களை கண்டுபிடித்து பழிவாங்கினார் என்பது மீதி கதை.
அதனை திரை அரங்கிலோ, டோர்றேன்ட் பதிவிரக்கத்தின் மூலமாகவோ அல்லது விரைவில் தொலைகாட்சிகளில் காண்க.



நான் ரசித்தவை


1. நர்கோலேப்சி பற்றி எளிமையாக காட்சி அமைப்புகளில் விளக்கியது. 
2. விஷால் லக்ஷ்மி மேனன் முத்தக்காட்சி விரசமா இல்லாம எடுத்தது.
3. லக்ஷ்மி மேனன் விஷாலுக்கு தன் காதலை சொல்லும் தருணம்.
4. விஷாலின் இயல்பான நடிப்பு.


பிடிக்காதவை

1. பொருத்தமே இல்லாத பிற்பகுதி. 
2. வில்லன் லக்ஷ்மி மேனனை கெடுத்ததற்கு கூறப்படும் கேவலமான  காரணம்.
3. இனியா கதாபாத்திரம். 
4. வில்லனின் எரிச்சலூட்டும் நடிப்பு. 





முற்பாதிக்காக ஒருமுறை பார்க்கலாம்.

நட்புடன்,
உ.சரவணன் 













Sunday, August 8, 2010

Welcome



வணக்கம்!

என் புதிய தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன். இது என்னோட இடம். இங்க எழுதப்போகும் அனைத்தும் மெய்யும் பொய்யும் இரண்டறக்கலந்து இருக்கும். வெகு நாட்களாக எழுத எத்தனித்து இன்று அது இயல்பாய் நிகழ்ந்தது. 

சத்தியமா சொல்றேன் சுத்தமான தமிழ் எழுதுறது ரொம்ப கஷ்டம். சரி விஷயத்துக்கு வரேன். நான் ஏன் எழுதணும் அப்படின்னு கேட்கலாம். ம்ம் இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்னு என்னால தெளிவா  எழுத முடியுதானு தெரிஞ்சிக்கணும். அடுத்தது எனக்கு பிடிச்ச ரசிச்ச செய்திகளையெல்லாம் பதிவு செய்யணும்.

சினிமால இருந்து சிக்கன் வரைக்கும் எனக்கு தோணுறது எல்லாத்தையும் எழுதப்போறேன். 

ரசிக்கின்ற மனம் உள்ளவனே ரசனையான மனிதன். 

படித்தமைக்கு நன்றி.

நட்புடன்,  
உ.சரவணன்